‘போதைப்பொருள் தொடர்பான குற்றதிற்காக கனடியர்களுக்கு சீனா மரண தண்டனை விதித்ததற்கு கனேடிய அரசு தனது கண்டனங்களை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான கனேடிய குடிமக்களை “அடிப்படை மனித கண்ணியத்தை” மீறும் ஒரு செயலில் சீனா தூக்கிலிட்டதை அடுத்து, கனடாவின் சர்வதேச விவிகாரங்களுக்கான அமைச்சு சீனாவை கண்டிதுள்ளது
கனடா “குறித்த குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு கருணை காட்ட வேண்டும் என சீனாவின் மேல் மட்டங்களுக்கு மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா “அணைத்து வழக்குகளிலும்,அணைத்து இடங்களிலும் மரண தண்டனையைப் பயன்படுத்துவதற்கு எதிராக உறுதியாக உள்ளது” என செய்தித் தொடர்பாளர் சார்லோட் மேக்லியோ தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து தூதரக உதவிகளை வழங்கி வருகிறது, ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களையோ அல்லது அவர்களில் எத்தனை பேர் இருந்தனர் என்பதையோ தூதரகம் வழங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டாவாவில் உள்ள சீனத் தூதரகம் மரண தண்டனையை ஆதரித்து, “சீனச் சட்டத்தை மீறுபவர்கள் சட்டத்தின்படி பொறுப்பேற்க வேண்டும்” என இன்று புதன்கிழமை வெளிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட கனடியர்களின் பெயர்களையோ அல்லது அவர்கள் செய்ததாகக் கூறப்படும் குறிப்பிட்ட குற்றங்களையோ தூதரகம் தெரிவிக்கவில்லை , அவர்கள் “போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகள் ” என்பதைத் தவிர.வேறு தகவல்கள் வெளியிடப்படவில்லை.
எத்தனை கனடியர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளனர் போன்ற விபரங்களும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
“சீனா எப்போதும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கிறது மற்றும் போதைப்பொருள் பிரச்சினையில் ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை’ அணுகுமுறையைப் பேணுகிறது,” என சீன தூதரகம் தெரிவித்தது . “வழக்குகளில் தொடர்புடைய கனேடிய பிரஜைகள் செய்த குற்றங்களின் உண்மைகள் தெளிவாக உள்ளன,எனவும் மேலும் அதற்கான சான்றுகள் உறுதியானவை எனவும் தண்டனை வழங்குவதற்கு போதுமானவை.”எனவும் தெரிவித்துள்ளது.
குறித்த வழக்குகள் “சட்டத்தின்படி கையாளப்பட்டதாகவும், கனேடியர்களின் உரிமைகள் மற்றும் நலன்களுக்கு “முழுமையாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளன” எனவும் தூதரகம் தெரிவித்தது.
மரணதண்டனைகளை கனடாவின் சர்வதேச விவகாரம் அமைச்சு கண்டித்ததை சீனாவின் தூதரகம் நிராகரித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த விரும்பினால் சீனாவின் நீதித்துறை எடுத்த முடிவுகளை கனடா ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
“சட்டத்தின் ஆட்சியையும் சீனாவின் நீதித்துறை இறையாண்மையையும் மதிக்கவும், பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்தவும், சீனாவுடன் ஒரே திசையில் செயல்படவும், உறுதியான நடவடிக்கைகளுடன் சீன-கனடா உறவுகளின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் கூட்டாக ஊக்குவிக்கவும் கனடா தரப்புக்கு நாங்கள் வலியுறுத்துகிறோம்,” எனவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
தெளிவற்ற தேசிய பாதுகாப்பு குற்றச்சாட்டுகளின் பேரில், டிசம்பர் 2018 இல் பெய்ஜிங்கில் கனடாவைச் சேர்ந்த மைக்கேல் கோவ்ரிக் மற்றும் மைக்கேல் ஸ்பேவரைக் கைது செய்ததிலிருந்து கனடாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் விரிசல் அடைந்துள்ளன.
ஈரானுக்கு எதிரான அமெரிக்கத் தடைகள் தொடர்பான மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அமெரிக்காவின் உத்தரவின் பேரில், சில நாட்களுக்கு முன்பு வான்கூவரில் ஹவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்சோ கைது செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக அவர்களின் கைதுகள் பரவலாகக் கருதப்பட்டன.
மேலும் சீனாவில் தற்போது சுமார் 100 கனடியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

