வவுனியாவில் மாவீரர் நினைவாலயம் ஒன்று திறந்துவைக்கப்பட்டதுடன் மாவீரர் பெற்றோர்களும் மதிப்பளிக்கப்பட்டனர்.
வவுனியா கலைமகள் விளையாட்டு மைதான மண்டபத்தில் இன்று காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது மாவீரர்களது பெற்றோர்கள் பிரதான வீதியில் இருந்து நிகழ்வு இடம்பெறும் மண்டபம் வரை மங்கள வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டு மதிப்பளிக்கப்பட்டதுடன், அதனைத்தொடர்ந்து மாவீரர் நினைவாலயம் திறந்துவைக்கப்பட்டது.
குறித்த நினைவாலயத்தில் மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதுடன், படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இந்நினைவாலயம் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொது அமைப்புக்கள், அரசியல் தரப்பினர் உட்பட பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
