நாட்டில் தற்போது சட்டவிரோதமான செயற்பாடுகள் அதிகரித்து வருகின்ற நிலையில் 345,000 ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்கு கொண்டு வந்த பெண்ணொருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் டுபாயில் உள்நாட்டு சேவையில் ஈடுபட்டிருந்த தெரணியகலவைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஆவார்.
குறித்த பெண் 02 பயணப்பொதிகளில் 23,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 115 சிகரெட் அட்டைப்பெட்டிகளை கொண்டு வந்துள்ளார்.