நேற்று ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 400 க்கு மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படை
அத்துமீறி எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி துரத்திப் பிடிக்க வென்றபோது கப்பல் விசைப்படகு மீது மோதியதில் படகு கவிழ்ந்து அதிலிருந்து நான்கு மீனவர்கள் கடலில் விழுந்தனர்.
இதில் இரண்டு பேர் உயிருடன் மீட்டு யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இரண்டு மீனவர்களை தேடும் பணியில் இருந்த போது ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்டார் அவரை யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் ஒரு மீனவர்களை தேடும் பணியில் இலங்கை கடற்படை மற்றும் சகமீனவர்கள் அவர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை கடற்படையை கண்டித்து இதுபோன்ற சம்பவத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு கண்டித்து தற்போது மீனவர்கள், மீனவ உறவினர்கள் துறைமுக பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொலிஸார் குவிக்கப்பட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.