இலங்கை இந்திய ஒரு நாள் கிரிக்கெட் தொடரானது ஆகஸ்ட் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது. குறித்த போட்டிக்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் நாட்டிற்க்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் பரபரப்பான இந்த தொடரில் இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர்களான மதிஷ பத்திரன மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகிய வீரர்கள் உபாதை காரணமாக போட்டியிலிருந்து விலகியுள்ளனர்.
இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது முன்றாவது போட்டி தொடரில் விளையாடும் போதே மதிஷ பத்திரனவிட்க்கு தோள் பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.
போட்டிக்கான பயிற்சியினை மேற்க்கொள்ளும் போது டில்ஷான் மதுஷங்கவிற்க்கு காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் பின்னுற பெர்னாண்டோ , துஷ்மந்த சமீர ஆகியோரும் சுகவீனம் காரணமாக போட்டியில் விளையாடவில்லை.
குறித்த வீரர்களின் விலகல் இலங்கை அணிக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.