Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் மோதல் – மூவர் கைது!

நவம்பர் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணைக்காகச் சென்ற கணவன், மனைவி மற்றும் மனைவியின் சகோதரர் ஆகியோருக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்கா வாகனத் தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது.

பார் வீதியைச் சேர்ந்த கணவன், மனைவிக்கிடையிலான குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி விவாகரத்து வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக இருவரும் தனித்தனியாக நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.

வழக்கு விசாரணை முடிந்து அடுத்த தவணை திகதியிடப்பட்ட பின்னர், மூவரும் நீதிமன்றத்திலிருந்து வெளியேறி காந்தி பூங்கா வாகனத் தரிப்பிடத்திற்குச் சென்றுள்ளனர்.

இதன்போது கணவனுக்கும் மனைவியின் சகோதரருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது. அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் விலக்கிவிட்டுள்ளனர்.

எனினும், பின்னர் கணவன் தனது காரை மைத்துனர் மீது செலுத்தி மோதியதாகவும், இதற்குப் பதிலடியாக மைத்துனர் காரைத் தாக்கியதில் வாகனம் பலத்த சேதமடைந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார், கணவன், மனைவி மற்றும் மைத்துனர் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளதுடன், காரையும் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி வடக்கு மாகாணத்தின் 134 இடங்களில் சி.சி.டி.வி. கமராக்களைப் பொருத்தத் திட்டம்!
அடுத்த செய்தி வசாவிளான் இராணுவ வைத்தியசாலையைப் பார்வையிட்ட பாதுகாப்புச் செயலாளர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இலங்கை மின்சார சபையின் வேலைநிறுத்தம் தீவிரப்படுத்தப்படும்!

செப்டம்பர் 8, 2025
இலங்கை

வவுனியா மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நட்ட ஈடு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

உரும்பிராயில் பொன்.சிவகுமாரனின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி!

ஜூன் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் ஆரம்பமாகியுள்ள கிரிக்கெட் சமர்

மார்ச் 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?