Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கு மாகாணத்தின் 134 இடங்களில் சி.சி.டி.வி. கமராக்களைப் பொருத்தத் திட்டம்!

நவம்பர் 18, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

வடக்கு மாகாணத்தின் ஆறு சிரஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளுக்கு உட்பட்ட 134 இடங்களில் சி.சி.டி.வி. கமராக்களைப் பொருத்த வேண்டிய தேவை அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில், வீதிப் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடியபோது, பிரதான வீதிகளில் வேகக் கட்டுப்பாட்டு அறிவிப்புப் பலகைகளைப் பொருத்துமாறு பொலிஸார் கோரிக்கை முன்வைத்தனர்.

இதற்குப் பதிலளித்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர், பல்வேறு இடங்களில் இது தொடர்பான மீளாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, வர்த்தமானியில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளுக்காகக் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதேவேளை, வடக்கு மாகாணத்தின் ஆறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளுக்கு உட்பட்ட 134 இடங்களில் சி.சி.டி.வி. கமராக்களைப் பொருத்த வேண்டிய தேவை அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

இக்கமராக்கள் வேகக் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவதுடன், குற்றச்செயல்களைத் தடுப்பதற்கும் கண்காணிப்பதற்கும் உதவும் எனக் குறிப்பிட்டார். இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரிடம் விசேட கோரிக்கையை முன்வைப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.

அண்மையில் யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டதைப் போன்று, சாரதிகளிடம் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான திடீர் பரிசோதனைகளை வடக்கு மாகாணம் முழுவதிலும் பரவலாக முன்னெடுக்க வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார். இதற்குத் தேவையான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொடுக்கத் தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

சாவகச்சேரியில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் வெளியான ஆள்மாறாட்டம் மற்றும் பொலிஸாருடனான தொடர்புகள் குறித்த தகவல்களையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவது அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதிவேக மோட்டார் சைக்கிள்களைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கைப்பற்றல் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகவும் கால இடைவெளிகளில் மீண்டும் முன்னெடுக்குமாறும் ஆளுநர் பணித்தார்.

வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் திடீர் பரிசோதனைகளை நடத்துவதற்கும் தேவையான ஒழுங்குகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.

முந்தைய செய்தி ஹாட்லி கல்லூரி மாணவர்களின் நினைவாகப் பருத்தித்துறையில் விசேட குருதிக்கொடை முகாம்
அடுத்த செய்தி மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் மோதல் – மூவர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் வீதிகள் புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்!

ஜூன் 22, 2025
இலங்கை

சீனத் தூதுவருடனான சந்திப்பு குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கருத்து!

செப்டம்பர் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தியாகதீபம் திலீபனின் நினைவுதினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு

செப்டம்பர் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தாய்லாந்திற்கு பயணமாகும் மட்டு சென் மைக்கல் கல்லூரி மாணவர்கள்

அக்டோபர் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?