Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

தமிழகத்தில் பாடசாலை மோசடி: பரபரப்பு வாக்குமூலம் வெளியீடு!

நவம்பர் 16, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

தமிழகத்தில் தனியார் பாடசாலைகளுக்கு அரச அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துகுமார், தி.மு.க நிர்வாகி அரசகுமாரின் பணிப்புரையின் பேரிலேயே மாவட்ட வாரியாகச் சென்று பணம் வசூலித்ததாகப் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தப் பண வசூல் விவகாரம் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கும் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதை அடுத்து, முன்னாள் அமைச்சர் மகேஷ் மீதான பொலிஸாரின் விசாரணைப் பிடி இறுகத் தொடங்கியுள்ளது.

இந்த மோசடி வழக்குத் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் எம்.எல்.ஏ முத்துகுமார், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள விசேட நீதிமன்றத்தில் அண்மையில் சரணடைந்திருந்தார்.

இதனையடுத்து அவரைக் கைது செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார், நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் எடுத்துத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பொலிஸாரின் விசாரணையின் போது முத்துகுமார் அளித்துள்ளதாகக் கூறப்படும் வாக்குமூலத்தில், சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக்கல்வித் துறை அலுவலகமான டி.பி.ஐ (DPI) வளாகத்தில் தமக்கு அலுவலக அறை மற்றும் அரச வாகனம் ஒதுக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக, அரசாங்கத்துடன் தமக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதை ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுக்கு மறைமுகமாக உணர்த்தி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் தமக்கிருந்த செல்வாக்கு காரணமாகத் தனியார் பாடசாலை நிர்வாகிகள் தம்முடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், தாமும் தி.மு.க செய்தித் தொடர்பு குழுவின் துணைத் தலைவராக இருந்த அரசகுமாரும் நெருங்கிய நண்பர்கள் எனவும் முத்துகுமார் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தனியார் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டு வந்த அங்கீகாரக் காலத்தை 20 ஆண்டுகளாக நீடித்துத் தமிழக அரசாங்கம் விதிகளில் திருத்தம் செய்தமையைத் தாம் பணம் வசூலிக்கப் பயன்படுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வழக்குகளில் சிக்கிய பாடசாலைகள் மற்றும் போதிய வசதிகள் பூர்த்தி செய்யப்படாத தனியார் பாடசாலைகளின் விபரங்களைத் திரட்டப் பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் சில அரச அதிகாரிகள் மறைமுகமாக உதவி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசகுமார் ஏற்பாடு செய்து கொடுத்த மாவட்ட வாரியான கூட்டங்களில் கலந்துகொண்டு, அவரது கட்டளையின் பேரிலேயே தனியார் பாடசாலை நிர்வாகிகளிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும், இவ்விடயம் அப்போதைய அமைச்சர் அன்பில் மகேஷுக்கும் தெரியும் எனவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நான்கு நாள் பொலிஸ் தடுப்புக் காவல் விசாரணை நிறைவடைந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ முத்துகுமாரை எதிர்வரும் நவம்பர் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு சென்னை விசேட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய செய்தி மொன்றியலில் எரிபொருள் விலை வீழ்ச்சி!
அடுத்த செய்தி தென்னாபிரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 17 பேர் பலி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

கோவை சிறுமி கொலை வழக்கு

மே 24, 2026
இந்தியா

தமிழக கட்சி தலைவர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் விஜய்

மே 11, 2026
இந்தியா

மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்கே பயன்: கர்நாடக துணை முதல்வர் உறுதி!

ஆகஸ்ட் 20, 2026
இந்தியாவிசேட செய்திகள்

பெண்களையும், மதப்பிரிவுகளையும் இழிவுபடுத்தும் ஆபாசப் பேச்சு ! – பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் அறிவுறுத்ததல்!

ஏப்ரல் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?