Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

தென்னாபிரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 17 பேர் பலி!

நவம்பர் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு பாரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 530 கிலோமீற்றர் இடைவெளியில் அமைந்துள்ள இரண்டு பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முதலாவது சம்பவம், நாட்டின் நிர்வாகத் தலைநகரான பிரிட்டோரியாவுக்கு அருகிலுள்ள ஜெஃப்ஸ்வில் எனும் குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள தற்காலிக வீடொன்றினுள் 6 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உட்பட 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குவாசுலு-நடால் மாகாணத்தின் பீட்டர்மரிட்ஸ்பேர்க் நகருக்கு வெளிப்புறத்திலுள்ள ஸ்வீட்வாட்டர்ஸ் பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டில் 8 ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச் சன்னங்களால் துளைக்கப்பட்டிருந்த வாகனமொன்றின் உள்ளிருந்து இவர்களது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பல இடங்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில், அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த இரண்டு தாக்குதல்களுக்குமான பின்னணி அல்லது நோக்கம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தென்னாபிரிக்க தேசிய பொலிஸ் ஆணையாளர் ஃபானி மசெமோலா தெரிவித்துள்ளார்.

சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசேட விசாரணைகளையும் தேடுதல் நடவடிக்கைகளையும் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தென்னாபிரிக்காவில் அண்மைக்காலமாகப் பதிவாகி வரும் துப்பாக்கி வன்முறைகள் குறித்துப் பாரிய கரிசனை எழுந்துள்ள நிலையிலேயே இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்நாட்டுப் பொலிஸ் புள்ளிவிபரங்களின்படி, தென்னாபிரிக்காவில் சராசரியாக நாளொன்றுக்கு சுமார் 60 கொலைகள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி தமிழகத்தில் பாடசாலை மோசடி: பரபரப்பு வாக்குமூலம் வெளியீடு!
அடுத்த செய்தி அடுத்த ஜேம்ஸ் பாண்ட்: ராபர்ட் பேட்டின்சன்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

போரில் 3000 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 9, 2026
அண்மைய செய்திகள்உலகம்

அமெரிக்கத் தேர்தல் –மக்களால் நிராகரிக்கப்பட்ட ட்ரம்ப்!

நவம்பர் 4, 2026
உலகம்

ராஜஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் உயிரிழப்பு!

அக்டோபர் 15, 2025
உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் — சர்வதேச எண்ணெய் விலை உயர்வு!

அக்டோபர் 14, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?