பொது இடத்தில் ஆபாசமாக பேசியமைக்காக தமிழ்நாட்டின் அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்,என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.அமைச்சர் பொன்முடி, பெண்களையும், மதப்பிரிவுகளையும் இழிவுபடுத்தும் வகையில், ஆபாச வார்த்தைகளைப் பிரயோகித்துப் பேசினார்.
இதனையடுத்து, திராவிட முன்னேற்றக்கழகத்தில் அவர் வகித்து வந்த பொறுப்புமிக்க பதவியிலிருந்து உடனடியாக அகற்றப்பட்டார்.
பெண்களையும், சைவம், வைணவத்தையும் இழிவுபடுத்தும் வகையில், ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியின் குற்றத்தைப் பதிவு செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு, தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
