நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாகவும், ‘ஜோ’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மாளவிகா மனோஜ் கதாநாயகியாகவும் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளனர்.
‘ஜோ’ படத்தை இயக்கிய ஹரிஹரன் ராம் எஸ் இந்தப் படத்தை இயக்குகிறார்.
மேலும், இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமாரே இசையமைக்கவுள்ளார்.
திரைப்படத்தின் Look Book போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
