இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதிநடிக்கும் திரைப்படம் ‘பாக்கெட் நாவல்’
மேலும், மாளவிகா மோகனன், ராஜ் பி. ஷெட்டி, கிஷோர் உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘ஆரண்ய காண்டம்’ போன்ற வித்தியாசமான திரைப்படங்கள் மூலம் தனித்துவமான இயக்குநராக அறியப்படும் தியாகராஜன் குமாரராஜா, மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தை ஹிந்தியில் அதிக தியேட்டர்களில் வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.
அத்தோடு 2027ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் திகதி பொங்கல் வெளியீடாகத் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
