இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய்பல்லவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “இஞ்சி வெல்லம்”
இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதோடு, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் இந்திய டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து படத்தை தாயாரிக்கின்றனர்.
காதல் திரைப்படமாக உருவாகி வரும் “இஞ்சி வெல்லம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதுடன், படத்தின் ரிலீஸ் திகதியையும் அறிவித்துள்ளனர்.
மூன்று மாதங்களுக்கு குறைவான மாதத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதுடன் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் திகதி திரைப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
