இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஆர்யா, சபீர், அசோக் செல்வன், கலையரசன், ஃபகத் ஃபாசில், லிங்கேஷ் மற்றும் சோபிதா துலிபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
கேங்ஸ்டர் கதைகளத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
இதனிடையே, படத்தின் மேக்கிங் வீடியோ ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என இயக்குநர் பா.ரஞ்சித் போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
