Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கைக்கு இந்தியா வழங்கும் 100 ஆம்புலன்ஸ் வண்டிகள்!

நவம்பர் 12, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

இந்திய அரசாங்கத்தின் 1725.73 மில்லியன் இலங்கை ரூபாய் நிதியுதவியுடன், 1990 சுவா செரிய’  அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு மேலும் 100 ஆம்புலன்ஸ்களை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க ஆகியோர் நேற்று புதன்கிழமை (11) கையெழுத்திடப்பட்டு பரிமாறிக் கொண்டனர்.

கொழும்பில் நடைபெற்ற முதலாவது பிம்ஸ்டெக் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்திற்காக இலங்கை வருகை தந்திருந்த இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், மற்றும் இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா மற்றும் இலங்கையின் சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸா ஆகியோரின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இலங்கைத் தலைவர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, தற்போதுள்ள ‘சுவா செரிய’ ஆம்புலன்ஸ் தொகுப்பில் முழுமையான வசதிகள் கொண்ட மேலும் 100 ஆம்புலன்ஸ்களைச் சேர்ப்பதன் மூலம், அவசர காலங்களில் உதவி தேவைப்படும் இடத்திற்குச் சென்றடையும் நேரத்தை 10 நிமிடங்களுக்கும் குறைவாகக் குறைப்பதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.

‘சுவா செரிய’ சேவையானது, ஆரம்பத்தில் 2016 ஜூலை மாதம் இலங்கையின் மேல் மற்றும் தெற்கு மாகாணங்களில் இந்திய அரசாங்கத்தின் 7.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டது. இதில் 88 ஆம்புலன்ஸ்களை வழங்குதல், அவற்றின் ஓராண்டு கால செயல்பாட்டுச் செலவுகளை ஈடுகட்டுதல் மற்றும் அவசர கால உதவி மையத்தை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.

பின்னர், 2018 ஜூலை மாதம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அப்போதைய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரால் இந்தச் சேவை இலங்கை முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இதற்காக இந்தியா மேலும் 15.02 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை வழங்கியது இது 209 ஆம்புலன்ஸ்களை வழங்குவதற்கும், அவற்றின் செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் பயிற்சிக்கான செலவுகளை ஈடுகட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டது.

இலங்கையின் சுகாதாரத் துறையில் இந்தியாவின் மேம்பாட்டு ஒத்துழைப்பானது, கோவிட்-19 தொடர்பான மருத்துவ உதவிகள், டிக்கோயா (னுiஉமழலய) மருத்துவமனையின் கட்டுமானம், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மற்றும் கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு, மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சை பிரிவு அமைத்தல் உள்ளிட்ட, மக்கள் நலனை மையமாகக் கொண்ட பல முக்கிய முன்னெடுப்புகளை உள்ளடக்கியுள்ளது.

இந்தத் துறையில் தற்போது நடைபெற்று வரும் திட்டங்களில், மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளை மேம்படுத்துதல், முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் மருத்துவ வார்டு வளாகத்தை உருவாக்குதல் மற்றும் தெனியாய   மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்குதல் ஆகியவை அடங்கும்.

முந்தைய செய்தி சாவகச்சேரியில் வாள், நக்கிள்ஸ் கிளிப் மற்றும் ஹெரோயினுடன் இருவர் கைது!
அடுத்த செய்தி கியூபெக்கில் ஆங்கில CEGEP மாணவர் சேர்க்கைக்குப் புதிய கட்டுப்பாடு – 2027இல் சட்டமூலம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ரயிலின் இயத்திரத்தின் அடியில் சிக்கிக்கொண்ட பெண் – பத்திரமாக மீட்பு!

செப்டம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினரை விசாரணைக்கு அழைத்த சிஜடியினர்

அக்டோபர் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

குற்றவியல் நடவடிக்கை முறைச்சட்டக்கோவை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்

மே 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

படுகொலை வழக்கு – பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

செப்டம்பர் 15, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?