Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் ஆங்கில CEGEP மாணவர் சேர்க்கைக்குப் புதிய கட்டுப்பாடு – 2027இல் சட்டமூலம்!

நவம்பர் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் (Quebec) மாகாணத்தில் ஆங்கில மொழி உயர்கல்வி நிலையங்களுக்கான (CEGEPs) மாணவர் சேர்க்கையைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டமூலம் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கியூபெக்கை ஆளும் ‘பார்ட்டி கியூபெக்வா’ (Party Québécois – PQ) அரசாங்கம் இந்தத் தகவலை அறிவித்துள்ளது.

கியூபெக்கின் பிரெஞ்சு மொழிப் பட்டயச் சட்டம் நிறைவேற்றப்பட்டு அடுத்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அந்தச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரெஞ்சு மொழி அமைச்சர் பாஸ்கல் பெருபே (Pascal Bérubé) ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

பிரெஞ்சு மொழியை மேலும் பாதுகாப்பதற்கான ‘கடுமையான’ நடவடிக்கைகள் இந்தப் புதிய சட்டமூலத்தில் உள்ளடக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், சட்டரீதியாக ஆங்கிலத்தில் கல்வி கற்கத் தகுதியுடைய மாணவர்கள் மாத்திரமே ‘சீஜெப்’ (CEGEP) எனப்படும் இளநிலை கல்லூரிகளில் இணைந்து கொள்ள முடியும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

“பிரெஞ்சு மொழி தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருப்பதையும், அது என்றென்றும் நிலைத்திருப்பதையும் உறுதி செய்வதற்கு தாம் அனைவரையும் நம்பியிருப்பதாகவும் அமைச்சர் பெருபே குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கியூபெக் சட்டமன்றத்தில் பார்ட்டி கியூபெக்வா (PQ) ஒரு சிறுபான்மை அரசாங்கமாக இருப்பதால், இந்தத் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு குறைந்தபட்சம் ஒரு எதிர்க்கட்சியின் ஆதரவேனும் அவசியம் என்னும் நிலையே காணப்படுகின்றது.

முந்தைய செய்தி இலங்கைக்கு இந்தியா வழங்கும் 100 ஆம்புலன்ஸ் வண்டிகள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

யூத வழிபாட்டுத் தலம் மீது தீவைக்க முயன்றவர் மொன்றியல் பொலிஸாரினால் நீதிமன்றத்தில் முன்னிலை

ஜூன் 8, 2026
கியூபெக்

தனியாரிடம் கைமாறும் நீல நிற தொட்டி (Blue Bin) மறுசுழற்சி திட்டம்

டிசம்பர் 5, 2025
கியூபெக்

”கனேடியப் பொருட்கள் மீதான வரிகளை அமெரிக்கா நீக்க வேண்டும் – கியூபெக் அரசு

ஏப்ரல் 25, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் லிபரல் கட்சியின் சபைத் தலைவர் பதவியிலிருந்து “மார்வா ரிஸ்கியை” நீக்கினார் பாப்லோ ரோட்ரிக்ஸ்!

நவம்பர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?