டொரண்டோ நகரின் குடியிருப்புப் பகுதிகளுக்கான நீல நிற தொட்டி (Blue Bin) மறுசுழற்சி திட்டம், 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல், டொரண்டோ மாநகராட்சியிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக ஒரு தனியார் நிறுவனத்திடம் மாற்றப்பட உள்ளது.
இந்த மாற்றம், மாகாண அரசாங்கத்தின் புதிய விதிமுறையின் கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது, மறுசுழற்சி நிர்வாகம் மற்றும் செலவினங்களின் பொறுப்பை நகராட்சிகளிடம் இருந்து நிறுவனங்களிடம் ஒப்படைக்கிறது.
குடியிருப்பாளர்கள் தற்போதுள்ள நீல நிற தொட்டிகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும் மாநகராட்சி வெளியிட்டுள்ள அதே மறுசுழற்சி சேகரிப்பு அட்டவணை பின்பற்றப்படும் எனவும் அரிவிக்கப்பட்டுள்ளது.


