அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளது. இந்த முடிவு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு பெரும் அரசியல் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த நவம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற தேர்தல் முடிவுகளின்படி, குடியரசுக் கட்சியிடமிருந்த பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.
இதன் மூலம் டிரம்ப் நிர்வாகத்தின் சட்டமூலங்களைத் தடுக்கவும், அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கவும் ஜனநாயகக் கட்சிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, செனட் சபையிலும் ஜனநாயகக் கட்சியினர் இரண்டு இடங்களைக் கைப்பற்றியுள்ள போதிலும், பெரும்பான்மையைப் பெறுவதற்குத் தேவையான இடங்களை இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை.
இதன்படி தேர்தல் முடிவுகளுக்குப் பதிலளித்த டொனால்ட் டிரம்ப், தாம் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் குடியரசுக் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஜனாதிபதியின் மக்கள் ஆதரவை அளவிடும் முக்கிய அரசியல் களமாக கருதப்படும் இடைக்காலத் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் இந்த வெற்றி டிரம்பின் எஞ்சியுள்ள ஆட்சிக்கால அரசியல் நகர்வுகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
