கனடாவின் 2026ஆம் ஆண்டுக்கான மத்திய வரவு செலவுத் திட்டம் வியாழக்கிழமை நவம்பர் 5ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தை அதிகரிக்க வேண்டும் என Bloc Québécois கோரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, தற்போதைய Grocery Benefit என அழைக்கப்படும் GST வரிக் கடன் நிவாரணத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பது அந்தக் கட்சியின் முக்கிய கோரிக்கையாகும்.
இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தகுதியுடைய குடும்பங்களுக்கு அதிகபட்சமாக 300 டொலர் வரை நிவாரணம் கிடைக்கக்கூடும் என அக்கட்சி முன்மொழிந்துள்ளது.
மேலும், 65 முதல் 74 வயதுக்குட்பட்ட முதியவர்களுக்கான ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
வீடற்றோர் பிரச்சினை, வாடகை உதவித் திட்டங்கள் மற்றும் சமூக வீடமைப்புத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
