மொன்றியலின் Montréal-Nord பகுதியில் இயங்கும் சமூக அமைப்புகளும் பெண்கள் உரிமை அமைப்புகளும் குடும்ப வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கு நகர மற்றும் மாகாண அரசாங்கங்கள் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளன.
குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குடும்ப மற்றும் துணைவர் வன்முறைகளை எதிர்கொள்ள தொடர்ச்சியான நிதி ஒதுக்கீடுகள், பாதுகாப்புச் சேவைகள் மற்றும் சமூக ஆதரவு திட்டங்கள் அவசியம் என அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
வெறும் உறுதிமொழிகள் போதாது, நடைமுறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
