நடப்பாண்டின் இறுதியுடன் இஸ்ரேலுக்கான நிதி மற்றும் ராணுவ உதவிகள் முழுமையாக நிறுத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இடைக்காலத் தேர்தல் வாக்களிப்புத் தொடங்குவதற்கு முன்னர் ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த போதே அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த முக்கியத் தகவலை வெளியிட்டார். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் சில மாதங்களுக்கு முன்பே இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் 4 பில்லியன் டொலர்களை அமெரிக்கா வழங்கி வந்த நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் அந்த உதவிகளை நிறுத்துவது குறித்து மாதங்களுக்கு முன்பே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், எதிர்காலத்தில் இஸ்ரேழுக்குத் தேவையான உதவிகள் எவையேனும் தேவைப்பட்டால் அமெரிக்கா கைகொடுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததிலிருந்து அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகளைப் பெறும் மிகப்பெரிய நாடாக இஸ்ரேல் விளங்கி
வருகிறது.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இதுவரை இஸ்ரேலுக்கு அமெரிக்காவால் வழங்கப்பட்ட மொத்த உதவியின் மதிப்பு கோடிக்கணக்கான டொலர்களைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
