Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

ஷேக் ஹசீனா நேர்காணலைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

ஆகஸ்ட் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வங்கதேச நாட்டின் முன்னாள் பிரதமரும் அவாமி லீக் தலைவருமான ஷேக் ஹசீனா, டெல்லியில் உள்ள வெளிநாட்டு செய்தியாளர் மன்றம் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணொளி கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டனும், அவாமி லீக் முன்னாள் எம்பியுமான சாகிப் அல் ஹசனும் கலந்து கொண்டார். செய்தியாளர் சந்திப்பு முடிந்த சில மணி நேரங்களிலேயே, மகுரா நகரின் கேஷப்மோர் பகுதியில் அமைந்துள்ள ஷகிப் அல் ஹசனின் மூதாதையர் இல்லத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி இரவு 8:45 மணியளவில் நடந்த இந்த தாக்குதலில் ஷகிப் அல் ஹசனின் இல்லம் பலத்த சேதமடைந்தது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவாமி லீக் கட்சி, “பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டதற்காகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வங்கதேசத்தை பாசிசம் சூழ்ந்துள்ளது என்பதற்கு இதுவே சான்று” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும், பிஎன்பி, இஸ்லாமிய ஜமாத் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஊடகங்களை அச்சுறுத்தி வருவதாகவும், ஜனநாயக கட்டமைப்பு என்ற பெயரில் அவாமி லீக் ஆதரவாளர்கள் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

முன்னதாக காணொளி வாயிலாக உரையாற்றிய ஷேக் ஹசீனா, சிறை தண்டனை அல்லது உயிரிழப்பு போன்ற எந்தவொரு ஆபத்துக்கள் வந்தாலும், நாட்டின் ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும் மக்களுக்காக உழைக்கவும் வரும் டிசம்பர் மாதம் மீண்டும் வங்கதேசத்திற்குத் திரும்பப் போவதாக உறுதியளித்தார். இத்தகைய சூழலில், ஷகிப் அல் ஹசனின் இல்லத்தின் மீது நடத்தப்பட்டுள்ள இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் அந்நாட்டில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தி ஸ்பெயின் அருகே நடுக்கடலில் பழுதான படகு: 15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி அகதிகள் பலி
அடுத்த செய்தி கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’: டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவுக்குத் தேர்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வியட்நாமுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…

ஏப்ரல் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போம் – அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங்

மே 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

“தமக்கென ஓர் இடம் – அழகான வாழ்க்கை” வீடமைப்பு வேலைத்திட்டம் – மன்னாரில் ஆரம்பம்

ஜூன் 18, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லக் காணியை விடுவிக்க கோரிக்கை

செப்டம்பர் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?