மொன்றியலின் Ahuntsic–Cartierville பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற விபத்தில் 18 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 17 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகனத்தைச் செலுத்திய நபர் விபத்துக்குப் பின்னர் சம்பவ இடத்திலிருந்து சென்றதாகக் கூறப்படும் நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பகுதியில் சைக்கிள் ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சந்திப்புப் பகுதியை மறுபரிசீலனை செய்ய நகர நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சைக்கிள் பாதைகளின் பாதுகாப்பு மற்றும் வாகனங்களின் வேகக் கட்டுப்பாடு தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
