கியூபெக்கின் Brossard பகுதியில் உள்ள Highway 15 தெற்கு வழித்தடத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 37 வயதுடைய Justyn Ingram என்பவர் உயிரிழந்துள்ளார்.
நவம்பர் 2ஆம் திகதி திங்கட்கிழமை மாலை சுமார் 5.30 மணியளவில், Matte Boulevard அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
எதிர்த்திசையில் பயணித்த வாகனம் ஒன்றிலிருந்து சக்கரம் கழன்று வந்து, Justyn பயணித்துக் கொண்டிருந்த குடும்பத்தினரின் வேனின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே மோதியுள்ளது.
வேனைச் செலுத்திய அவரது தந்தை Thomas Ingram சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதுடன், அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக Sûreté du Québec விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சமீபகாலமாக வாகனங்களின் சக்கரங்களில் உள்ள நட் கழற்றப்படும் அபாயகரமான செயல்கள் தொடர்பான செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இந்தச் சம்பவத்திற்கும் அதற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
