குகேஷ், சக நாட்டவரான அர்ஜூன் எரிகைசி உடன் மோதி எரிகைசியை வீழ்த்தியுள்ளார்.
இந்த தொடரில் இதற்கு முன்னர் இவ்விரு வீரர்களும் மோதிய ஆட்டத்தில் எரிகைசி வீழ்த்தியிருந்தார். அந்த தோல்விக்கு தற்போது குகேஷ் பதிலடி கொடுத்துள்ளார் .
வெற்றியின் மூலம் கூடுதலாக புள்ளிகள் பெற்ற குகேஷ் 11.5 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
7ஆவது சுற்று முடிவில் பாபியானோ கருனா 12.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். கார்ல்சென் 11 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும், அர்ஜுன் எரிகைசி 7.5 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திலும் உள்ளனர்.