Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கிலிருந்து மலையகத்துக்காக ஒலித்த குரல் மௌனித்தது

அக்டோபர் 10, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மலையகத் தமிழர்கள் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்காக குரல் கொடுத்த ஆய்வு கட்டுரைகளை எழுதிய, விழிப்புணர்வு நிகழ்வுகளை முன்னெடுத்த தமிழ்த் தேசிய மற்றும் குடிமைச் சமூக செயற்பாட்டாளரான சி. அ. யோதிலிங்கம் காலமானார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 8 மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்ற சத்திர சிகிச்சையை தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானதாக உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.

சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும், சட்டத்தரணியும், அரசியல் ஆய்வாளரும், ஓய்வுநிலை ஆசிரியருமான சி. அ.யோதிலிங்கம் குரல் அற்றவர்களின் குரலாகவும், சமூக நீதிக்காகவும், அநீதிக்கு எதிராகவும் அரசியல் போராட்டங்கள் பலவற்றில் முன்னின்று செயற்பட்டவர்.

தமிழ் மக்களின் அரசியல் விடுதலை, மலையகத் தமிழ் மக்களின் உரிமைகள், அரசியலமைப்பு சார்ந்த பெருமளவு நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

மலையகத் தமிழ் மக்களும் இலங்கையின் அரசியலமைப்பில் தனித்துவமான தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர்களில் சி. அ.ஜோதிலிங்கம் முதன்மையானவர்.

மலையகத் தமிழ் மக்களின் அரசியல் அடையாளம், தேசிய இன உரிமைகள், அரசியலமைப்பு அங்கீகாரம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாகத் தொடர்ச்சியாகக் கருத்துகளை முன்வைத்து வந்துள்ளார்.

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைந்து, அவர்களுக்கான உதவித் திட்டங்களையும் சமூகப் பணிகளையும் அவர் தனது மனைவியுடன் இணைந்து முன்னெடுத்துள்ளார். குறிப்பாக மீறியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் செய்த சேவைகள் அளப்பறியவை.

புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவுடன் மலையகத்தில் பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்ததுடன், நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களின் பகுதிகளுக்குச் சென்று பணியாற்றியமையும் அவரது சமூகப் பங்களிப்பின் முக்கிய அம்சமாகும்.

மலையக சமூக ஆய்வு மையத்துடனான அவரது தொடர்பும் செயற்பாடுகளும் மலையக மக்களின் சமூக, அரசியல் மற்றும் தேசிய அடையாளம் தொடர்பான விடயங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன.

மாற்று மே தினம் மற்றும் மலையக தேசிய பொங்கல் விழா உள்ளிட்ட நிகழ்வுகள் மற்றும் செயற்பாடுகளுடன் அவர் இணைந்து செயலாற்றியுள்ளார்.

மலையக மக்களின் உரிமைகள், அடையாளம் மற்றும் சமூக முன்னேற்றம் தொடர்பான விடயங்களில் சுமார் இரண்டு தசாப்தங்களாகத் தொடர்ந்து எழுதியும் கருத்துகளை முன்வைத்தும் வந்துள்ளார்.

மலையகப் பிரதேச இளைஞர்களிடையே அரசியல் அறிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதிலும் அவர் பங்களித்துள்ளார். அரசியலமைப்பு, அதிகாரப் பகிர்வு, மலையகத் தமிழ் தேசியம் உள்ளிட்ட விடயங்களில் இலவச வகுப்புகளை நடத்தி, இளைஞர்கள் தமது அரசியல் உரிமைகள் மற்றும் சமூகத்தின் எதிர்காலம் குறித்துப் புரிந்துகொள்ள சி. அ. யோதிலிங்கம் உதவியுள்ளார்.

முந்தைய செய்தி முதல் பெண் மாவீரர் மாலதியின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்தி ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்க வேண்டும் – ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தொடரும் நாயாற்று பால திருத்த பணிகள்(Video)

டிசம்பர் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

22வது திருத்தச் சட்ட மனு விசாரணை ஒத்திவைப்பு

செப்டம்பர் 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அட்டமஸ்தானாதிபதி பல்லேகல ஹேமரத்ன தேரருக்கு விளக்கமறியல்

மே 9, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் தமிழ் பொலிஸாருக்கு செயலமர்வு

ஜூலை 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?