Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்க வேண்டும் – ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி

அக்டோபர் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் மத்திய குழு கூட்டம் இன்று வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

அரசைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டுவரப்படும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், தொழிற்சங்கங்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் ஜனநாயகப் போராட்டங்களை முற்றிலுமாக ஒடுக்கும் நோக்கம்கொண்டது.

நாட்டில் ஒரு கட்சி ஆட்சி முறையை கொண்டுவருவதற்கான மறைமுக முயற்சியாகக் கருதப்படும் இச்சட்டத்தை, சர்வதேச சமூகமும் உள்ளூர் தரப்புகளும் ஏற்கனவே நிராகரித்துள்ள நிலையில், அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட்டு, அவற்றுக்கான உரிய அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும். மேலும், தற்போதைய ஜனாதிபதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, ஜனாதிபதி முறைமை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பது கூட்டணியின் முதன்மைக் கோரிக்கையாக மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெடுக்குநாறிமலையில் புத்தர்சிலை வைப்பு, யாழ்ப்பாணத்தில் திலீபன் சிலை மற்றும் செம்மணி புதைகுழிகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் மூலம் மக்களின் உண்மையான கோரிக்கைகள் திசைதிருப்பப்படுகின்றன.

வடக்கு-கிழக்கில் தொடரும் நில அபகரிப்புகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் ஏனைய அடிப்படைக் பிரச்சினைகளுக்கு சர்வதேசப் பொறிமுறையின் ஊடாக உரிய தீர்வு காணப்பட வேண்டும்.

தற்போதைய ஆட்சியின் இரண்டு வருட காலத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

இதனைக் கண்டித்து சாவகச்சேரியில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாணப் பகுதிகள் உட்பட ஏனைய மாவட்டங்களிலும் தொடர்ச்சியான கண்டனப் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி வடக்கிலிருந்து மலையகத்துக்காக ஒலித்த குரல் மௌனித்தது
அடுத்த செய்தி தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் மல்லாவி மத்திய கல்லூரி சாதனை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

உள்ளூராட்சி தேர்தலுக்காக கட்டுப்பணத்தை செலுத்திய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

மார்ச் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். யானை மிரண்டதால் இருவர் காயம்…

மே 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கச்சதீவு செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்

பிப்ரவரி 27, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

போதைப்பொருளுடன் மீன்பிடி படகிலிருந்த 11 மீனவர்கள் கைது

ஜனவரி 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?