Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

காடழிப்பு தொடர்பில் வனவளத் திணைக்கள அதிகாரிகள் மீது குற்றம்சாட்டும் பா.உ.ரவிகரன்

நவம்பர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வன்னி மாவட்டத்தில் பொதுமக்களின் பூர்வீகக் காணிகள் மற்றும் விவசாய நிலங்களைத் துப்புரவு செய்வதற்கு ஆவணங்களைக் கோரி தடைவிதிக்கும் வனவளத் திணைக்களம், மறுபுறம் சட்டவிரோத காடழிப்புகளைக் கட்டுப்படுத்தத் தவறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், வனவளத் திணைக்களத்தில் பணியாற்றும் சில அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் சுற்றாடல் அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் இன்று மூன்றாம் திகதி நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போது எழுப்பப்பட்டுள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டப் பகுதிகளில் ஒருபுறம் நூற்றுக்கணக்கான ஏக்கர் வனப்பகுதிகள் சட்டவிரோதமாக அழிக்கப்படுவதாகவும், மறுபுறம் பொதுமக்கள் தங்களது பூர்வீகக் காணிகளைத் துப்புரவு செய்வதற்குக்கூட அனுமதி மறுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, காணிகளில் மாமரம், வேம்பு மரங்கள் மற்றும் பழைய வீடுகளின் அத்திவாரங்கள் காணப்பட்டாலும், உரிய ஆவணங்கள் இல்லை என்ற காரணத்தைக் கூறி துப்புரவுப் பணிகளுக்குத் தடைவிதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், படையினரின் சட்டவிரோத நிர்மாணங்கள் மற்றும் அத்துமீறிய காடழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் வனவளத் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திரிவச்சகுளம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் இடம்பெற்ற காடழிப்பு சம்பவங்களையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த சுற்றாடல் அமைச்சர் வைத்திய கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்துள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

வனப்பாதுகாப்புப் பகுதிகளில் காணிகளை வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்துவதற்கோ அல்லது வன அழிப்புக்கோ அரசாங்கம் அனுமதி வழங்குவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சில வனப்பகுதிகளில் வளர்க்கப்படும் மரங்கள் வெட்டப்பட்டு மரக்கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்படுவதாகவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

இதற்கிடையில், வனவளத் திணைக்களத்தின் சில அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

முந்தைய செய்தி இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை இந்திய அரசாங்கம் பெற்றுத்தரும் -பா.உ. இளையதம்பி சிறிநாத்
அடுத்த செய்தி சீரற்ற காலநிலையால் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

போதை மாத்திரைகளுடன் கைதான இளைஞன்

ஜனவரி 10, 2026
இலங்கை

யாழ். மாவட்ட செயலரை சந்தித்தார் நயினாதீவு விகாராதிபதி

ஜனவரி 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சிறைச்சாலைகளில் அதிகரித்து வரும் இடநெரிசல் – அரசு உயர்மட்ட ஆலோசனை

ஜூலை 20, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 101 பேர் காணாமல் போனதாக தகவல்!

மார்ச் 4, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?