நாட்டில் சீரற்ற காலநிலையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 23 ஆம் திகதியிலிருந்து இன்று வரையான காலப்பகுதிக்குள் 5,829 குடும்பங்களை சேர்ந்த 21,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 19 மாவட்டங்களில் உள்ள 147 பிரதேச செயலக பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளது.
மேலும் சீரற்ற காலநிலையால் 6 பேர் காயமடைந்துள்ளதுடன், மூவர் காணாமல் போயுள்ளனர்.
இதனால் 8 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 767 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.