Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

களுவாஞ்சிக்குடியில் சடலமாக மீட்கப்பட்ட விவசாயி

ஏப்ரல் 19, 2026
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இனம் தெரியாதோரல் வெட்டியும் கொத்தியும் கொலை செய்யப்பட்ட நிலையில் 68 வயதுடைய விவசாயி ஒருவர் மிளகாய் தோட்டம் ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தில் கடந்த 6 தினங்களில் 4 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் 4 பேரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி கடற்கரை வீதியிலுள்ள வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ள மிளகாய் செய்கை தோட்டம் ஒன்றில் இன்று காலையில் விவசாயியான சிறிமுருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 68 வயதுடைய காசிநாதன் ஜெயகாந் என்பவரது தோட்டத்தில் அவரை வெட்டியும் கொத்தியும் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைது செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள விளாவெட்டுவான் நாவற்குடா பிரதேசத்தில் கடந்த 13ம் திகதி இடம்பெற்ற மரணவீடு ஒன்றில் இரவில் உறவினர் இருவருக்கு இடையே ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து ஒருவர் மீது மண்வெட்டி பிடியால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் மீது தாக்குதல் நடாத்திய 19 வயது இளைஞனை 14ம் திகதி செவ்வாய்கிழமை கைது செய்ததுடன் சிகிச்சை பெற்று வந்த 35 வயதுடைய தங்கத்துரை ரவீந்திரா நேற்று சனிக்கிழமை (18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த 17ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டி பிரதேசத்தில் மதுபானம் குடிப்பதற்கு ஆயிரம் ரூபா பணம் தர மறுத்த தாயாரை அவருடைய உள்ஆடையை கிழித்து கழுத்தை இறுக்கி தரையில் தள்ளிவிட்டு கொலை செய்த 42 வயதுடைய குமாரசாமி வசந்தா என்பவரது சடலம் மீட்கப்பட்டதுடன் தாயை கொலை செய்த குற்றச்சாட்டில் 20 வயதுடைய அவரது மகனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் முதலாம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இவ்வாறு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சிவபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 7ம் திகதி 16 வயது மகள் சைக்கிள் ஓடியதை கண்ட தந்தையார் அவரை சிறு பிரம்பால் அடித்து கண்டித்ததை கண்ட சகோதரன் தந்தையாரை கம்பு ஒன்றினால் அடித்ததையடுத்த அவர் அங்கிருந்து எதிரே உள்ள வீடு ஒன்றில் புகுந்து மறைந்து கொண்டார்.

அவர் பகுங்கியிருந்த வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு அவர் மீது தடியால் அடித்து தாக்கியதையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் 17ம் திகதி வெள்ளிக்கிழமை 4 பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய மாரிமுத்து ரவிச்சந்திரன் உயிரிழந்துள்ளார்.

இதில் தந்தையை தாக்கிய இரண்டாவது மகனான 25 வயதுடைய இளைஞனை கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் 19 வயதுடைய 3 வது மகன் கடந்த டித்தா புயல் காலத்தில் காணாமல் போள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

அதேவேளை 17 ம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு மகாஓயா சூரியடி கொன்வல பகதியில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பை நோக்கி பிரயாணித்த ரயிலில் மோதுண்டு உயிரிழந்த நிலையல் அந்த பகுதியைச் சேர்ந்த விசேட அதிரடிப்படையில் கடமையாற்றிவரும் முதியன்சலாகே பிரசாத் சதுன் பண்டார என்பவர் சடலமாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதகை;காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இவ்வறு இடம்பெற்ற கொலை சம்பவ இடங்களுக்கு மட்டக்களப்பு பொலிஸ் தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி பொலஜஸ் பரிசோதகர் கே.ரவிச்சந்திரன் மற்றும் பொலிஸ்சாஜன் நா.கிசோர்குமார் மற்றும் அரச சட்ட வைத்திய அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு சென்று சடலங்களை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி, சந்திவெளி, ஏறாவூர், வவுணதீவு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

முந்தைய செய்தி வீதியில் வீசப்பட்ட மனித உடல் பாகங்கள் – மக்கள் கடும் எதிர்ப்பு
அடுத்த செய்தி கடற்படையால் சித்திரவதை செய்த மீனவருக்கு இதுவரை நீதி இல்லை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கொட்டாவை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நபர் தொடர்பில் வெளிவந்த தகவல்

மே 9, 2025
இலங்கை

வடக்கு கிழக்கு தமிழர்களிடம் கட்சிகள் அதிகரித்து விட்டது- இந்திய துணை ஜனாதிபதி

ஏப்ரல் 22, 2026
இலங்கை

கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயிருந்த இளைஞன் சடலமாக மீட்ப்பு

டிசம்பர் 1, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 42 ஆவது போட்டி இன்று

ஏப்ரல் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?