இலங்கை கடற்பரப்பில் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவை மீன்பிடி படகு ஒன்றுடன் 07 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து தலைமன்னாருக்கு வடக்கே மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 07 பேர் படகு ஒன்றுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (1) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமன்னாருக்கு வடக்கே அமைந்துள்ள இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த பல இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததை வடமத்திய கடற்படை கட்டளையகம் கண்காணித்தது.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, ஒரு இந்திய மீன்பிடிப் படகுடன் அதிலிருந்த ஏழு (07) இந்திய மீனவர்களும் இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும், கடற் படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடிப் படகு, இந்திய மீனவர்களும் தலைமன்னார் இறங்குதுறை க்கு அழைத்து வரப்பட்டது டன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
