ஒன்ராறியோவில் இந்த ஆண்டு குளிர்காலம் வழக்கத்தைவிட வெப்பமாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல் நினோ காலநிலை நிகழ்வு, கனடாவின் குளிர்கால வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் டொராண்டோ உள்ளிட்ட தெற்கு ஒன்ராறியோ பகுதிகளில் வெப்பநிலை சராசரியை விட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
எனினும், கடுமையான குளிர் அலைகள் மற்றும் பனிப்பொழிவுக்கான வாய்ப்புகளும் முற்றிலும் நீங்கவில்லை என வானிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
