Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். அனுமதிப்பத்திரமின்றி இயங்கிய வெளிமாகாண சொகுசுப் பேருந்து

அக்டோபர் 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்திலிருந்து உரிய அனுமதிப்பத்திரமின்றி வெளிமாகாணத்துக்கான சொகுசுப் பேருந்துச் சேவையில் ஈடுபட்ட பேருந்து ஒன்று, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினரும் பொலிஸாரும் இணைந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு நடத்திய திடீர் சோதனையின்போது பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்குச் செல்லும் வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட குறித்த பேருந்து, உரிய அனுமதிப்பத்திரமின்றி இயங்குவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கூட்டுச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், அதிகார சபையின் போக்குவரத்து அலுவலர், பறக்கும் படைப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து இச்சோதனையை மேற்கொண்டனர்.

இதன்போது அனுமதியின்றி சேவையில் ஈடுபட்டிருந்த பேருந்து இடைமறிக்கப்பட்டு, அதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குறித்த பேருந்து தொடர்பான விடயத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து மேலதிக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் பயணிகள் ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொண்டாலோ, சாரதிகள் அல்லது நடத்துநர்கள் விதிமீறல்களில் ஈடுபட்டாலோ, அதுதொடர்பான முறைப்பாடுகளை உரிய ஆதாரங்களுடன் (ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்க முடியும் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி யாழில் போதைப்பொருள் பாவித்தமை தொடர்பில் பேருந்து சாரதி கைது!
அடுத்த செய்தி வவுனியாவில் விளையாட்டு மைதானத்திற்கான மதில் அமைக்க 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இந்திய பிரதமரை சந்தித்தார் ஜானாதிபதி அநுர

பிப்ரவரி 20, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொண்ட்ரியல் குழந்தைகள் மருத்துவமனையில் ஒருவருக்கு தட்டம்மை உறுதியானது

ஜனவரி 7, 2026
இலங்கை

கடற்தொழில் அமைச்சர் பிரதேச செயலர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

டிசம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் பாடசாலையொன்றில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஜூலை 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?