Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் பாடசாலையொன்றில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஜூலை 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னார் அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை கடந்த சில வருடங்களாக கல்வியிலும் பாடசாலை அபிவிருத்தியிலும் பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்து குறித்த பாடசாலையின் தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரி இன்றைய தினம் புதன்கிழமை (22) காலை பாடசாலைக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாணவர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் நலன் விரும்பிகள் இணைந்து கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஈடுபட்டனர்.

குறித்த அதிபர் தொடர்பாகவும் அவரை உடனடியாக மாற்றக் கோரி ஏற்கனவே போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும், வருகை தந்த மன்னார் வலயக்கல்வி திணைக்கள அதிகாரிகள் துரித நடவடிக்கைகள் மேற்கொள்வதாக கூறிய போதும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே துரித கதியில் குறித்த பாடசாலையில் உள்ள தற்போதைய அதிபரை மாற்றி நிர்வாகத்திறன் உள்ள ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதோடு, தற்போது பல மாணவர்கள் பாடசாலையில் இருந்து இடை விலகி பிரிதொரு பாடசாலைக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த அதிபரை உடன் மாற்றி புதிய அதிபரை நியமிக்க மன்னார் வலயக்கல்வி திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்காது விட்டால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப போவதில்லை என பெற்றோர்கள் எச்சரித்துள்ளனர்.

இறுதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் வலயக்கல்வி திணைக்களத்திற்கு ஊர்வலமாக சென்று தமது கோரிக்கையை அதிகாரிகளிடம் முன் வைத்தனர்.

முந்தைய செய்தி கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற விவசாய குழுக் கூட்டம்
அடுத்த செய்தி மன்னாரில் அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து – நால்வர் காயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி

ஏப்ரல் 19, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி பகுதியில் இன்று புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!

ஆகஸ்ட் 2, 2025
Uncategorizedஇலங்கை

உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு !

ஆகஸ்ட் 8, 2025
1
இலங்கை

யாழில் வாள்களுடன் இளைஞர்கள் கைது

மார்ச் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?