Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
ஆரோக்கியம்

தங்க நிறத்திலான கிவி பழம் உண்பதால் கிடைக்கும் நன்மைகள்.

பிப்ரவரி 18, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

பச்சை நிற கிவி பழங்களைப் போலல்லாமல், தங்க நிற கிவி பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக பாலிபினால்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் அதிகமாக உள்ளன.

பொதுவாக, பச்சை நிறத்தில் இருக்கும் கிவி பழங்களைப் பற்றி மட்டுமே நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், ஆனால் தங்க நிறம் அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும் கிவி பழங்களை இதற்கு முன் பார்த்திருக்கிறீர்களா அல்லது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், பல்வேறு அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கும் இந்த தங்க நிற கிவி பழங்களை தினசரி உட்கொள்வதற்கு பல ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும்.

பச்சை நிற கிவி பழங்களைப் போலல்லாமல், தங்க நிற கிவி பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக பாலிபினால்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் அதிகமாக உள்ளன. உடலுக்கு மிகவும் அவசியமான இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வீக்கத்தைக் குறைக்கவும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. தங்க நிறத்தில் இருக்கும் கிவி பழத்தில் விற்றமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்துகள் மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன, அவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றன, செல்களை சேதப்படுத்தும் நிலையற்ற அணுக்களை எதிர்த்துப் போராடுகின்றன, சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. எனவே, தங்க நிறத்தில் இருக்கும் கிவி பழத்தை தினசரி உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது ஏராளமான நன்மைகளை பெற உதவுகிறது.

தங்க நிற கிவி பழங்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அவை உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் கணிசமாக மேம்படுத்துகிறது. இந்த கிவி பழங்களில் விற்றமின் சி நிறைந்துள்ளதால், உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நோய்களைத் தடுக்க உதவுகிறது.இதன் ஆக்ஸிஜனேற்ற பண்பு, செல்களை சேதப்படுத்தும் நிலையற்ற அணுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் சிறந்த சரும ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

இந்த நிற கிவி பழங்களில் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளதால், இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் அடங்கியிருக்கும் பொட்டாசியம், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. எனவே, பச்சை நிற கிவி பழங்களை சாப்பிடுவதற்குப் பதிலாக ஆரோக்கியத்தின் ஆற்றல் மூலமாக இருக்கும் தங்க நிற கிவி பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

பொட்டாசியம் : ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும், உடலுக்கு தேவையான நீர் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிப்பதில் பொட்டாசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உடல் சரியாக செயல்பட பொட்டாசியம் முக்கிய பங்காற்றுகிறது. பொட்டாசியம் தசைகள் சுருங்கவும், சாதாரண இரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் உதவுகிறது.

நீரிழிவு நோய் : தங்க நிற கிவி பழங்களில் இயற்கையாகவே குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளது மற்றும் இதில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. மேலும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் இதில் நிரம்பியுள்ளன. எனவே, இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான தேர்வாக அமைகிறது.

செரிமான ஆரோக்கியம் : தங்க நிற கிவி பழங்களில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், வழக்கமான குடல் இயக்கங்களை பராமரிப்பதோடு, மலச்சிக்கலை போக்கவும் மற்றும் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

இதய ஆரோக்கியம் : தங்க நிற கிவி பழங்களை வழக்கமாக சாப்பிடுவதன் மூலம், ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் எளிதாக குறைக்கலாம். மேலும் இதய ஆரோக்கியத்திற்கும் இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கிறது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்.
அடுத்த செய்தி கனடாவில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான விமானம் – பலர் படுகாயம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

ஆரோக்கியம்

சுரைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்….

பிப்ரவரி 6, 2025
ஆரோக்கியம்

இரவு வேலை செய்யும் பெண்களே அவதானம் – ஆஸ்துமா வர வாய்ப்பு என கண்டறிவு

ஜூலை 23, 2025
ஆரோக்கியம்

அளவிற்கு அதிகமாக எலுமிச்சை ஜூஸ் எடுத்துக்கொண்டால் ஏற்படும் ஆபத்துக்கள்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

தொண்டைக் கரகரப்பை நீக்க வீட்டு மருத்துவம்

ஆகஸ்ட் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?