கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
தன்னுடைய ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட தவறினால் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு இரத்துசெய்யப்பட்டு அவர் சிறை தண்டனையை பெற்று வருகின்றார்.
எனவே இவ்விடயம் தொடர்பில் மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டமை நீதிமன்றத்தின் சுயாதீன தீர்ப்பு என்று கூறியுள்ளார்.

