லவால் நகரின் பேருந்துச் சேவைகளை மறுசீரமைப்பதற்காக, பொதுமக்களிடமிருந்து கருத்துகளைச் சேகரிக்கும் புதிய ஆலோசனை நடவடிக்கையை Société de transport de Laval (STL) தொடங்கியுள்ளது.
ஒக்டோபர் மாத இறுதிவரை நடைபெறும் இந்த ஆலோசனையில், பயணிகள் தங்களுடைய போக்குவரத்துத் தேவைகள், தற்போதைய சேவைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய விடயங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கலாம்.
2007ஆம் ஆண்டில் லவாலில் Metro நிலையங்கள் திறக்கப்பட்ட காலத்திலிருந்து நகரின் வளர்ச்சியும் மக்களின் பயணப் பழக்கங்களும் மாறியுள்ளதால், பேருந்து வலையமைப்பை எளிமையாகவும் திறமையாகவும் மாற்றுவது இதன் நோக்கமாகும். முக்கிய வலையமைப்பின் மறுசீரமைப்பு 2028ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டுள்ளது.
