Alto திட்டம் கியூபெக் மாகாணத்தின் புதிய அரசியல் சூழலால் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளது.
இந்தத் திட்டம் Montreal, Laval, Ottawa, Toronto உள்ளிட்ட நகரங்களை அதிவேக மின்சார ரயில் சேவையால் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், புதிய மாகாண அரசை அமைத்துள்ள Parti Québécois கட்சி இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
திட்டத்திலிருந்து கியூபெக் விலகுமா என்பது குறித்து இன்னும் தெளிவான முடிவு வெளியாகவில்லை. Montreal–Ottawa பிரிவில் கட்டுமானப் பணிகள் 2029 அல்லது 2030ஆம் ஆண்டில் தொடங்கலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
