பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு அவரச நிவாரண உதவியாக 2 மில்லியன் அமெரிக்க டொலரை அமெரிக்கா வழங்கியுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இந்த தகவலை தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தருணத்தில் அமெரிக்கா இலங்கையுடன் துணை நிற்பதாகவும் அவர் தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
