ஜப்பானின் ஒகினாவாவில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜப்பானிய அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைப்பதாக அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்க்கோ ரூபியோ உறுதியளித்துள்ளார்.
உள்ளூர் பெண் ஒருவர் ஹோட்டல் ஒன்றில் உயிரிழந்ததைத் தொடர்ந்து பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் மொடேகி தொஷிமிட்சுவுடன் தொலைபேசியில் உரையாடிய போதே மார்க்கோ ரூபியோ இந்த உறுதிமொழியை வழங்கினார்.
ஒகினாவாவில் உயிரிழந்த ஜப்பானிய குடிமகனுக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், ஜப்பான் அரசுடனும் உள்ளூர் அதிகாரிகளுடனும் இணைந்து விசாரணைகளை நடத்துவதில் அமெரிக்கா உறுதியுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தலைநகர் நஹாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 39 வயதான அன்னா யாகி என்ற பெண்ணைக் கொன்று கொள்ளையடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், புளுடென்மா மரைன் கார்ப்ஸ் விமான நிலையத்தைச் சேர்ந்த டெவின் ஜேக்கப் பல்லார்ட் என்ற அமெரிக்க மாவீரர் (Marine) கடந்த அக்டோபர் 4ஆம் திகதி கைது செய்யப்பட்டார். எனினும் தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஒகினாவாவில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவத்தினருக்கு ஒரு மாத கால ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஒழுக்கம் மற்றும் தரநிலைகள் குறித்த கட்டாய பயிற்சி முடியும் வரை அவர்கள் மது அருந்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் அதிகளவிலான அமெரிக்கப் படைகளைக் கொண்டுள்ள ஜப்பானில், ஜப்பானை தளமாகக் கொண்ட 18,000 மரைன் வீரர்களில் பெரும்பாலோர் ஒகினாவாவில்தான் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீதான அமெரிக்கத் தடைகள் மற்றும் அக்டோபர் 30ஆம் திகதி அட்லாண்டாவில் தொடங்கவிருக்கும் ஜி20 வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு குறித்தும் மார்க்கோ ரூபியோவும் மொடேகி தொஷிமிட்சுவும் விவாதித்தனர்.

