மொன்றியல் நகரில் தீவிரமடைந்து வரும் வீட்டுவசதி நெருக்கடியைக் கண்டித்தும், தேர்தல் பிரச்சாரத்தில் இவ்விவகாரத்தை முதன்மைப் பொருளாக மாற்றக் கோரியும், சமூக உரிமை ஆர்வலர்கள் மற்றும் வீட்டுவசதி ஆதரவாளர்கள் வெற்றிடமாகக் கிடந்த கட்டடம் ஒன்றை ஆக்கிரமித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டடத்தை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள், மொன்றியல் நகரில் அதிகரித்து வரும் வீட்டு வாடகை, சமூக வீட்டுவசதித் திட்டங்களின் பற்றாக்குறை மற்றும் வீடற்றோர் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்தும் கவலை வெளியிட்டுள்ளனர்.
நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் வீட்டுவசதி நெருக்கடிக்கு உரிய தீர்வு காண உறுதியான வாக்குறுதிகளை வழங்க வேண்டும் என்பதே இப் போராட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
தேர்தல் பிரசார காலத்தில் அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“மொன்றியல் நகரில் குறைந்த வருமானம் பெறும் மக்கள் மற்றும் நடுத்தர குடும்பங்கள் தங்குவதற்கு ஏற்ற மலிவு விலை வீடுகள் முற்றிலும் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது” என போராட்டத்தை ஒருங்கிணைத்த பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் வெற்றிடமாகக் இருக்கும் அரசாங்க மற்றும் தனியார் கட்டடங்களை உடனடியாகக் கையகப்படுத்தி, குறைந்த வாடகையிலான சமூக அல்லது சமூகக் கூட்டுறவு வீடுகளாக (Social and Community Housing) மாற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
