உலகளாவிய சூழலியல் வசதி (உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி) எனும் செயல் திட்டத்தின் கீழ், கடலோர கண்டல் தாவரங்களின் வளர்ச்சி ஊடாக சூழலை பாதுகாக்கும் முகமாக கண்டல் தாவரங்கள் நாட்டும் செயற்பாடு கிளிநொச்சி, பூநகரி மற்றும் மன்னார் கீலிக்கரையான் பிட்டி சதுப்பு நிலப் பகுதிகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
GEF/SGP/UNDP நிறுவனத்தின் நெறிப்படுத்தலின் கீழ் Ministry of Crab நிறுவனத்தின் நிதியுதவியுடன், மன்னார், அடம்பன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் முதல் கட்டமாக கண்டல் தாவர கன்றுகள், நேற்றைய தினம் (11) மாலை வைபவரீதியாக நாட்டி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் UNDP நிறுவனத்தின் நிர்வாக உத்தியோகஸ்தர் டிலிஸா , Ministry of Crab நிறுவனத்தின் உத்தியோகத்தர் சமூகம் திரு. சுமுகன் சர்மா தலைமையிலான குழுவினர் மற்றும் UNDP இன் மன்னார் மாவட்டகள இணைப்பாளர் திருமதி ஜெயவதனி மற்றும் அறிவு முகாமைத்துவம் பகுதி திட்ட இயக்குனர் தர்மலிங்கம் கணேஸ், உட்பட We Can அமைப்பின் பிரதிநிதிகள் கீலியன் குடியிருப்பு மற்றும் வேட்டையான் முறிப்பு மீனவ அமைப்பு பிரதிநிதிகள், வனவள திணைக்கள உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த செயற்திட்டத்தின் ஊடாக மன்னார் மாவட்ட கரையோரப் பகுதிகளில் சுமார் 7500 கண்டல் தாவரங்கள் நடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.