தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு வவுனியாவில் வியாபாரம் கலை கட்டியுள்ளதுடன், நகரில் அதிக சனநெரிசல்களையும் அவதானிக்க முடிகிறது.
2025 ஆம் ஆண்டு தமிழ் – சிங்களப் புத்தாண்டானது எதிர்வரும் திங்கள் கிழமை இடம்பெறவுள்ள நிலையில் அதனை கொண்டாடும் முகமாக வவுனியா நகரிற்கு அதிகளவிலான மக்கள் வருகை தந்து புத்தாடைகள், வெடிகள், இனிப்பு பண்டங்களை கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது.
கடந்த வருடத்தை விட இம் முறை புத்தாண்டு வியாபாரம் கலை கட்டியுள்ளதுடன், மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஆர்வத்துடன் தயாராகி வருவதையும் அவதானிக்க முடிந்தது.