Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

மார்ச் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளுரில் சுய தொழிலில் ஈடுபடும் குறிப்பாக சமூக மட்டத்தில் சிறு சேமிப்பு மற்றும் கடன் சேவை வழங்கும் பெண்களை குறித்த சட்டத்துக்குள் கொண்டு வருவதால் தமக்கு ஏற்படவுள்ள பாதிப்புக்களை கருத்தில் கொண்டு அதற்கு எதிராக மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் சுய தொழில் முயற்சியாளர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பதாதைகளில் ‘கிராமிய சேமிப்பு திட்டங்களை அளித்து நிதி நிறுவனங்களுக்கும் வட்டிக்காரர்களுக்கும் வாய்ப் பளிக்காதே, ‘இச்சட்டம் பெண்களை அடிமையாக்க நுண் நிதி நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது.

இச்சட்டம் சுய உதவி குழுக்களின் சேமிப்புகளை ஆபத்திற்குள் தள்ளுகிறது, அவசர தேவைக்கு பணம் கிடைக்கும் ஒரே வழியான சமூக சேமிப்பு திட்டங்களை தடை செய்யாதே, ‘நாங்கள் இச்சட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் ஏழைகள் சமூக மட்ட சேமிப்பு இல்லாமல் எதிர் கொள்ளப் போகும் அவல நிலையை மீள் பரிசீலனை செய்யுங்கள்’ போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவர்களாக பெண்கள் காணப்பட்டனர்.

தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஊர்வலமாக மன்னார் மாவட்டச் செயலகத்தின் நுழைவாயிலில் வைத்து ஜனாதிபதிக்கான மகஜரை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களிடம் கையளித்தனர்.

மகஜரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் குறித்த மகஜரை உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

முந்தைய செய்தி வவுனியாவில் தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்த பிரதி அமைச்சர்
அடுத்த செய்தி சுமத்ரா தீவில் நில அதிர்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் 400 ஏக்கருக்கு மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்கள் அழிவு!

பிப்ரவரி 3, 2025
இலங்கை

நெடுந்தீவை சென்றடைந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து

பிப்ரவரி 16, 2026
1
இலங்கை

மன்னாரில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்ட நிகழ்வு

மார்ச் 12, 2025
இலங்கை

யாழில் இடம்பெற்ற தொழில் சந்தையில் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்!

செப்டம்பர் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?