முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத் திட்டமானது கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா யங்ஸ் ஸ்ரார் மைதானத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
குறித்த தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் போதைப் பொருளை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், 1818 என்ற அவசர தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த தொலைபேசி இலக்கம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்களும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் முச்சக்கர வண்டிகளுக்கு ஓட்டி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, உதவி மாவட்ட செயலாளர் நா.கமலதாசன், வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி, முச்சக்கர வண்டிகள் சங்க தலைவர், பொலிசார், சமுதாய பொலிஸ் குழு உறுப்பினர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
