Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இருளில் மூழ்கியுள்ள யாழ்ப்பாண பண்ணை பகுதி – ஒளியூட்டுமாறு ரஜீவன் எம்.பி கோரிக்கை

ஏப்ரல் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பிரதான வீதியில் பண்ணை பகுதியில், பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சீர் செய்யுமாறு , வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி கடிதம் மூலம் கோரியுள்ளார்.

அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அனுப்பிய கடிதத்தில்,

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பாதையிலிருந்து தீவகத்தை நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் உள்ள மின்விளக்குகள் நீண்டகாலமாகப் பழுதடைந்துள்ளமையால், அப்பகுதி இரவு நேரங்களில் முழுமையாக இருளில் மூழ்கியுள்ளது.

இவ்வீதியானது யாழ்ப்பாணத்தின் மிக முக்கியமான பொது இடமாக விளங்குவதுடன், அப்பகுதியில் மக்கள் தினமும் உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சிகளில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன், குடும்பங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மாலை நேரங்களில் பொழுதுபோக்கிற்காக ஒன்றுகூடும் இடமாக இது காணப்படுகின்றது.

அதேவேளை தீவகப் பகுதிகளுக்கான பிரதான இணைப்புப் பாதையாக இது இருப்பதனால், வெளிச்சமின்மை காரணமாக வீதி விபத்துக்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

தற்போது மின்விளக்குகள் ஒளிராத காரணத்தினால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதுடன், இருளைப் பயன்படுத்தி தேவையற்ற சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

ஆகவே, பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு, குறித்த பகுதியில் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை உடனடியாகப் பழுதுபார்த்து மீண்டும் ஒளிரச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
அடுத்த செய்தி யாழில். மலேரியாவால் ஒருவர் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

முல்லைத்தீவில் கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் சிறப்பான முறையில் ஆரம்பம்!

பிப்ரவரி 23, 2025
1
இலங்கை

வவுனியாவில் நான்கு சபைகளில் தனித்துப் போட்டியிடவுள்ளோம்.

மார்ச் 8, 2025
இலங்கை

தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பில் அவதானம்!

செப்டம்பர் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நான்கு இலங்கையர்கள் கைது!

ஜூலை 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?