Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

காரைநகரில் பண்பாட்டுப் பெருவிழா

செப்டம்பர் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், காரைநகர் பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த பண்பாட்டுப் பெருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காரைநகர் இந்துக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவின் ஆரம்ப நிகழ்வாக காரைநகர் பிரதேசத்தின் கலை ஆற்றுகைகளுடன் விருந்தினர்கள் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

தொடர்ந்து, கிழவன்காடு கலாமன்ற மாணவர்களின் வரவேற்பு நடனம் மற்றும் குழு இசை நிகழ்வுகள் இடம்பெற்று, ஒரே அரங்கில் பல்வேறு கலை வடிவங்கள் பண்பாட்டுப் பெருவிழாவில் காரைநகர் பிரதேசத்தின் பாரம்பரிய கலைகளையும், கலைஞர்களின் திறமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில், 2026ஆம் ஆண்டுக்கான “கலைஞானச்சுடர்” விருதுகளும் “கலைமுகை” விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் தர்சினி நிதர்சனும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் கிருஸ்ணபிள்ளை விசாகரூபனும் கலந்துகொண்டனர்.

கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் கிருஸ்ணானந்தன் மாலினி, காரைநகர் கிராமியக் கலை இளங்கலைஞர் சற்குணநாதன் சத்தியராஜ் மற்றும் காரைநகர் நாடகத்துறை முதுகலைஞர் திருநாவுக்கரசு பிரபாகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

முந்தைய செய்தி நல்லூரில் தியாக தீபத்தின் ஒன்பதாம் நாள் நிகழ்வு
அடுத்த செய்தி ஆளுநரின் வர்த்தமானி மீதான இடைக்கால நிவாரணங்கள் வழக்கு முடிவடையும் வரை நீடிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

ஜூலை 4, 2025
இலங்கை

டிட்வா புயலின் தீவிரம் அதிகரிப்பு

நவம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்….

மார்ச் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சஜித் மற்றும் ரணில் இடையே சந்திப்பு

டிசம்பர் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?