Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஆளுநரின் வர்த்தமானி மீதான இடைக்கால நிவாரணங்கள் வழக்கு முடிவடையும் வரை நீடிப்பு!

செப்டம்பர் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா மாநகரமுதல்வரை பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால தடைகட்டளைகளை வழக்கு முடிவடையும் வரை நீடித்து வவுனியா மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

வடமாகாண ஆளுநர் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக வவுனியா மாநகர முதல்வர் காண்டீபனின் பதவியை நீக்கியிருந்தார். அதற்கு எதிராக காண்டீபன் தரப்பினால் எழுத்தாணை மனு ஒன்று வவுனியா மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்தது.

அதன்படி மனுதாரரின் கோரிக்கையின் அடிப்படையில் மூன்று இடைக்கால நிவாரணங்களை கடந்த யூலை மாதம் மேல் நீதிமன்றம் வழங்கியது.

அந்தவகையில் காண்டீபன் முதல்வர் பதவியிலும் அல்லது உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குகின்ற குறித்த வர்த்தமானி பிரசுரம் மன்றால் இடை நிறுத்த ப்பட்டிருந்தது. இரண்டாவது அந்த வர்த்தமானியின் அடிப்படையில் எதிர் மனுதாரர்கள் எந்த நடவடிக்கையினையும் எடுக்க கூடாது என்ற ஒரு தடைஉத்தரவும் வழங்கப்பட்டது.

மூன்றாவதாக காண்டீபனை பிரதியீடு செய்கின்ற வகையிலே இன்னொரு முதல்வரை தெரிவுசெய்வதற்கோ நியமிப்பதற்கோ அல்லது உறுப்பினரை தெரிவுசெய்வதற்கோ எந்த நடவடக்கையும் எடுக்க கூடாது என்கின்ற இடைக்கால தடை உத்தரவுகள் மன்றால் வழங்கப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த விண்ணப்பத்தில் மாநகர முதல்வர் பதவி மீதான இடைக்காலத் தடைகட்டளைகளை நீடிப்பதா அல்லது அதனை விலக்குவதா என்பது தொடர்பாக கடந்த தவணைகளில் நீண்ட விவாதங்கள் இடம்பெற்றிருந்தது.

அந்த வகையில் இருதரப்பு விவாதங்களையும் எழுத்துமூல சமர்ப்பணமாக வழங்குமாறும் மன்று உத்தரவிட்டது. அதன்படி இருதரப்பு சார்பிலும் எழுத்துமூல சமர்ப்பணங்கள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இன்று அதன் மீதான கட்டளை வழங்கப்பட்டது. அந்தவகையில் முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்காலத் தடைக்கட்டளையினை வழக்கு முடிவடையும் வரை நீடித்து மேல் நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன். அது தொடர்பான வழக்கு தொடர்ந்து இடம்பெறவுள்ளது. மனுதாரர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி இ.தயாபரன் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

முந்தைய செய்தி காரைநகரில் பண்பாட்டுப் பெருவிழா
அடுத்த செய்தி யாழில் சிரமதான பணியில் ஈடுபட்ட இந்திய துணைத்தூதராக அதிகாரிகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி , கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு பேரணி!

ஜூன் 10, 2025
இலங்கை

மன்னாரில் 21 வயதுடைய இளம் குடும்ப பெண்ணை காணவில்லை

ஜனவரி 11, 2026
அண்மைய செய்திகள்உலகம்

இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறித்த அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் வோல்கர் டர்க் இன்று சமர்ப்பிக்கின்றார்

ஆகஸ்ட் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

மே 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?