Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கின் வீட்டு நெருக்கடிக்கு குடியேற்றமே காரணம் என்ற PQ குற்றச்சாட்டு; நிபுணர்கள் மறுப்பு!

செப்டம்பர் 15, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் நிலவும் கடுமையான வீட்டுவசதிப் பற்றாக்குறை மற்றும் பாடசாலைகளில் ஏற்படும் இட நெருக்கடிக்கு, கட்டுப்பாடற்ற குடியேற்றமே முதன்மைக் காரணம் என பார்ட்டி கியூபெக்குவா (PQ) கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு, கல்வி மற்றும் வீட்டுவசதித் துறை நிபுணர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

தற்காலிக மற்றும் நிரந்தரக் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரிப்புத் தேவையில் தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், பல தசாப்தங்களாக நிலவும் கட்டமைப்பு ரீதியான தவறான நிர்வாகமே தற்போதைய நெருக்கடிகளுக்கு உண்மையான காரணம் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கியூபெக் நகரின் புறநகர்ப் பகுதியான லொரெட்வில்லில் (Loretteville) உள்ள பாடசாலையொன்றில் 24 தற்காலிக வகுப்பறைகள் சேர்க்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய 'பார்ட்டி கியூபெக்குவா (PQ) கட்சியின் தலைவர் பிளமொண்டன், குடியேற்றவாசிகளின் வருகையே பாடசாலைகளில் இடநெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

அத்துடன், ஆளும் கொவாலிசியன் அவனீர் கியூபெக் (CAQ) அரசாங்கத்தின் தவறான குடியேற்றக் கொள்கைகளே இதற்குப் பொறுப்பு
என்றும் அவர் விமர்சித்தார். கியூபெக் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்புப் பராமரிப்புப் பிரச்சினைகளே உண்மையான சவால்கள் என ஆசிரியர் சங்கங்களும் கல்வி நிபுணர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

வீட்டுவசதிப் பற்றாக்குறை குறித்தும் கருத்து தெரிவித்த பார்ட்டி கியூபெக்குவா கட்சித் தலைவர், குடியேற்றவாசிகளின் வருகையால் வீடுகளுக்கான தேவையும் வாடகையும் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த பல வருடங்களாக கியூபெக் மாகாணத்தில் புதிய வீடுகள் மற்றும் கட்டுப்படியாகும் விலையிலான வீடுகளின் (Affordable Housing)
கட்டுமானம் பெருமளவில் குறைந்துள்ளது.ஏர்பிஎன்பி (Airbnb) போன்ற குறுகிய கால வாடகைச் சேவைகளால் ஆயிரக்கணக்கான வீடுகள் பொது வாடகைச் சந்தையிலிருந்து வெளியேறியுள்ளன.

வட்டி விகிதங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் புதிய திட்டங்களைத் தொடங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
குடியேற்றவாசிகளின் வருகை தேவையை அதிகரித்துள்ளதை ஒப்புக்கொள்ளும் நிபுணர்கள், அதேவேளையில் கட்டுமானத் துறையில்
நிலவும் தீவிரத் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் குடியேற்றவாசிகளின் பங்களிப்பு அவசியமானது என்றும்
தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பார்ட்டி கியூபெக்குவா கட்சி குடியேற்றப் பிரச்சினையை முதன்மைப் பிரசாரப் பொருளாக மாற்றி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி கியூபெக் உற்பத்தித் தொழிற்சாலைகள் அமெரிக்காவிற்கு இடம்மாறும் அபாயம்; – புதிய கட்டுப்பாடுகளால் கியூபெக் பொருளாதாரம் பாதிப்பு!
அடுத்த செய்தி கியூபெக் தேர்தல் விவாதத்திற்கு தலைவர்கள் தயார்; புதிய வாக்குறுதிகள் வெளியீடு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சர்வதேச நீதி கோரிய உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதி நாள்!

அக்டோபர் 1, 2025
கியூபெக்முதன்மை செய்தி

டெரெபோன் இடைத்தேர்தலில் புதிய வாக்களிப்பு முறை – கியூபெக்கில் முக்கிய மாற்றம்

மார்ச் 25, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய மக்கள் சக்தி உளவியல் போரை ஆரம்பித்துள்ளனர் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

ஜூலை 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமனம்!

ஆகஸ்ட் 23, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?