Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சர்வதேச நீதி கோரிய உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதி நாள்!

அக்டோபர் 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதிநாள் போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.

யாழ் செம்மணியில் கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை வரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் இறுதிநாளா இன்றைய தினம் மதியம் 1 மணியளவில் கவனயீர்ப்பு போரட்டத்தை முன்னெடுத்து தீப்பந்தங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேவேளை சர்வதேச சிறுவர் தினத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், போராட்டத்தின் ஆரம்பத்தில் அணையா விளக்கு பகுதியில் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி போராட்டத்தை ஆரம்பமானது.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்ககள், சிறிலங்காவில் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இனவழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் போர் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

முந்தைய செய்தி தடை செய்யப்பட்ட வலைகளை விற்பனைக்கு வைத்திருந்த இருவர் கைது!
அடுத்த செய்தி செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வு – செலவீன பாதீட்டு அங்கீகார அறிக்கை 13ஆம் திகதி தாக்கல் செய்யப்படுமா!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா வேப்பங்குளத்தில் அரச ஊழியர்கள் போராட்டம்

அக்டோபர் 11, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள் – 17 ஏப்ரல் 2026

ஏப்ரல் 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு தொடர்பான விசேட கலந்துரையாடல்

மே 3, 2026
இலங்கை

பெல்மதுல்லை பகுதியில் பேருந்திலிருந்து தவறி வீழ்ந்த பெண் வைத்தியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

செப்டம்பர் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?